மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

மணிரத்னத்தின் ஹீரோ ஜாக்கி சானின் பிரதிபலிப்பா?

மணிரத்னத்தின் ஹீரோ ஜாக்கி சானின் பிரதிபலிப்பா?

மணிரத்னத்தின் சமீபத்திய ஹீரோ ‘காற்று வெளியிடை’ வருண் சக்ரவர்த்தியும் ஜாக்கி சானும் ஒரே மாதிரியானவர்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், என்ன செய்வது உண்மை அதுதான்.

‘காற்று வெளியிடை’ படத்தின் உச்சமான காட்சி எது தெரியுமா? காதலி லீலாவை கர்ப்பமாக்கிவிட்டு, அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல தகப்பனா என்னால இருக்க முடியாதும்மா எனக் கொஞ்சி கெஞ்சுவதுதான். கடைசியாக எட்டு நாள்கள் விடுமுறை கிடைத்ததற்காக காதலியைத் தேடி அலைவார். அதிலும், காதலிக்கும்போது விமானத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியவர், காணாமல்போன காதலியைத் தேடும்போது பஸ்ஸிலும், காரிலும் சுற்றுவார். சரி, அதை விடுவோம். இதில் ஜாக்கி சான் எங்கிருந்து வருகிறார்.

ஜாக்கி சானின் படங்களை மட்டும் ரசிக்காமல், அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள், இந்தச் செய்தியைச் சொன்னபோது இது பழைய விஷயமாச்சே என்கின்றனர். ஆனால், இளைய தலைமுறையில் பலர் இந்தத் தகவலை அறியாதவர்களாக இருப்பதால் இந்தப்பதிவு.

1982ஆம் ஆண்டு ஜாக்கி சானுக்கும் அவரது மனைவி ஜோன் லின் ஃபெங் ஜியோவுக்கும் திருமணமாகியது. பெயர் பெரியதாக இருப்பதால் ஜோன் எனச் சுருக்கிக்கொள்வோம். ஜாக்கி சானுக்கு இருந்த பல காதலிகளில் ஜோனும் ஒருவர். ஆனால், இவரை மட்டும் ஜாக்கி திருமணம் செய்துகொண்டதற்குக் காரணம் அவர் கர்ப்பமாக இருந்ததுதான். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள்கள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான் அப்போது ஜோன் வயிற்றில் இருந்தார். அவரது எதிர்காலம் வீணாகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தைச் சொல்லி ஜாக்கி சானை நிர்ப்பந்தப்படுத்தி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்கள். இந்தத் தகவலை கடந்த 2015ஆம் ஆண்டு China Press பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜாக்கி சான் தெரிவித்திருக்கிறார்.

இதேமாதிரி தான் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் அண்ணன் கேரக்டரான மதுசூதனன் பிள்ளை கேரக்டரும் 9 மாத கர்ப்பிணியான தன் காதலியைத் திருமணம் செய்துகொள்வார். அதேபோல ஜாக்கியின் இரண்டாவது குழந்தை பிறந்த கதையும் மணிரத்னத்தின் திரைப்படத்தில் இருக்கிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017