மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

குடிநீர் திட்டப்பணிகளுக்குக் கூடுதல் நிதி: முதல்வர்!

குடிநீர் திட்டப்பணிகளுக்குக் கூடுதல் நிதி: முதல்வர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஏப்ரல் 13ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவிவரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான குடிநீருக்காக பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஏப்ரல் 13ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், இரா.துரைக்கண்ணு, ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் சத்யகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது முதல்வர் பழனிசாமி பேசுகையில், “வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கும் பொருட்டு ரூ.2,247 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதன் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டுத் தொகையினை விரைந்து வழங்கிட வேண்டும். வறட்சியால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினைச் சமாளிப்பதற்காக ரூ.501.70 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

மேலும், எதிர்வரும் கோடைகால குடிநீர் தேவையைச் சமாளிக்கும் பொருட்டு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.25 கோடியுடன் கூடுதலாக ரூ.40 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.30 கோடியுடன் கூடுதலாக ரூ.35 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.25 கோடியுடன் கூடுதலாக ரூ.25 கோடியும் ஆக மொத்தம் கூடுதலாக குடிநீர் திட்டப்பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017