மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

‘தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் சித்திரை முதல் நாளான (ஏப்ரல் 14ஆம் தேதி) இன்று முதல் புதிய வளர்ச்சி, மலர்ச்சி, வெற்றியை வழங்கும் ஆண்டாக இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்’ என்று தமிழக கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்

“தமிழக மக்களுக்கு என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பிறக்கும் புது வருடப் பிறப்பு விடியலை மட்டும் சுட்டிகாட்டுவது அல்ல. பொதுவான நமது லட்சியத்தை அடைவதற்கு அடிகோடிட்டுக் காட்டுகிறது. இதை அடைய கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சந்தோஷமான நேரத்தில் நமது கலாசாரம், பாரம்பர்யம் ஆகியவற்றுடன் கைகோத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என உறுதியேற்போம்”.

முதல்வர் பழனிசாமி

“தமிழ்ப் புத்தாண்டு மலர்கின்ற சித்திரை முதல் நாளான இந்த இனிய நாளில், என் அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ‘தமிழ்ப் புத்தாண்டு’ திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பன்னெடுங்காலமாய் தமிழ் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றி, தமிழ்ப் புத்தாண்டை வேறு ஒரு தினத்துக்கு மாற்றிய செயலை திருத்தி, நமது முன்னோர் வகுத்த வழிமுறையின்படியும், தமிழ் மக்களின் விருப்பப்படியும் சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முறையை நிலைநாட்டியவர் புரட்சித்தலைவி அம்மா என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய கனவாகும்’ என்றுரைத்த புரட்சித்தலைவி அம்மா கனவை நனவாக்கிட, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அயராது உழைத்து, அவர் வகுத்துத் தந்த வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து தமிழகத்தைக் கொண்டு செல்ல இந்த இனிய நாளில் உறுதியேற்போம். இத்தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் தம் வாழ்வில் புதிய வளர்ச்சியையும் புதிய மலர்ச்சியையும் புதிய வெற்றிகளையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

“உலகத்தமிழர் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து கடைப்பிடித்து வரும் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று அனைவர் இல்லமும், உள்ளமும் நன்றாக நிறைந்து சிறப்புற்று வாழ அன்புடன் வாழ்த்துகிறேன். ஜெய ஆண்டு பிறந்ததன் பயனாக இந்தியத் திருநாட்டில் தேசபக்திமிக்க நரேந்திர மோடியின் வெற்றிமிகு ஆட்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்தியாவை வாழ்த்தவும், வரவேற்கவும் வரிசையில் வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவுக்கு வேகமாக பிரதமர் மோடியின் ஆட்சி அமைந்துள்ளது. நாடும், வீடும், நாமும் அதனால் மகிழ்கின்றோம். ஹேவிளம்பி ஆண்டு பிறக்கின்ற இந்த நல்ல நாளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தைத் தருகின்ற தாமரையின் ஆட்சியைத் தமிழகம் கண்டிட மோடியின் வளர்ச்சி வேகத்துக்கு தமிழகம் முன்னேற அனைத்து மக்களும் உறுதியேற்போம். இந்தியாவில் தமிழகம் முதல் நிலை மாநிலமாக மாறிட ஹேவிளம்பி ஆண்டு வழி காட்டட்டும். ஹேவிளம்பி ஆண்டில் தமிழ், தமிழன், தமிழகம் உலகில் முதல்நிலை பெற்றிட உறுதி ஏற்று பணிபுரிவோம்; வெற்றி பெறுவோம். அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.”

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

“தமிழர்களின் வாழ்வு செழிக்கவும், வேற்றுமைகள் மறந்து ஒற்றுமை தொடரவும், புதிய சாதனைகள் படைத்து வளமான தமிழகத்தை உருவாக்கவும் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறவும், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக அமையவும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

“தமிழக மக்களின் கஷ்டங்கள் நீங்கி நிம்மதியாக வாழ, புத்தாண்டில் வழிபிறக்கும். உலமெங்கும் தலைகுனிந்து நிற்கும் தமிழர்களின் தலைநிமிர்ந்து நிற்க வழி பிறக்கட்டும்.”

பாமக நிறுவனர் ராமதாஸ்

“சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களைச் சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம்”.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

“இந்த இனிய நாளில் மக்கள் அனைவரின் துன்பங்கள் அகன்று, சகோதரத்துவம் ஓங்கி, வறுமை அகன்று, மத நல்லிணக்கம் தழைத்தோங்கிடவும், விவசாயிகள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, வளமும் பெருகி இன்பமுற்று வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்”.

பாஜக தலைவர் தமிழிசை

“தமிழ்ப் புத்தாண்டு ஒவ்வொரு தமிழரின் உரிமையை பாதுகாப்பதற்கும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நம் உயிரான தமிழ்மொழி உலகமெங்கும் ஓங்கி ஓலிப்பதற்கும் வழி செய்யட்டும்”.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

“தமிழ் மக்கள் வாழ்வில் கடந்த காலங்களில் நிகழ்ந்த துயரங்கள், இன்னல்கள், துன்பங்கள் நீங்கி இனிவரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். தமிழகத்தில் நிலவிய வறட்சி நீங்கி விவசாயம் செழிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், நதிநீர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கவும், மது இல்லா சமுதாயம் உருவாகவும் புத்தாண்டு வழி வகுக்க வேண்டும்”.

அன்புமணி ராமதாஸ்

“சித்திரை வந்தால் வசந்தம் மலரும் என்பது நம்பிக்கை. இதுவரை நாம் அனுபவித்த நெருக்கடிகளும், அவதிகளும் விலகி, அனைவர் வாழ்விலும் அமைதியும், வளமும் பொங்க உழைக்க உறுதியேற்போம்”.

ஏ.சி.சண்முகம்

“ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு அனைத்து தமிழர்களின் வாழ்வில் இன்னல்களை நிரந்தரமாய் தீர்த்து, அவர்கள் வாழ்வில் நிம்மதியும், குறைவிலா இன்பமும் கிடைத்திட வாழ்த்துகிறேன்”.

எர்ணாவூர் ஏ.நாராயணன்

“இந்த ஹேவிளம்பி ஆண்டில் மழை வளம் செழித்து விவசாயிகளின் துயர் நீங்கும் ஆண்டாகவும், அதன்மூலம் தமிழக மக்களுக்கு சுபிட்சமும் மகிழ்ச்சியும் சூழும் ஆண்டாக அமையவும் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம்”.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுலம் மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி.சேகர் ஆகியோரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

“சித்திரை மாதம் 1ஆம் நாள் முதல் ‘ஹேவிளம்பி’ ஆண்டு தமிழர்களின் புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது. இப்புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளத்தையும், அமைதியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இப்புத்தாண்டு தடைக்கற்களை தகர்த்தெறிந்து புதுவை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் உளமாற வேண்டுகிறேன்.

சித்திரை திருநாள் ஒரு தமிழர் திருநாள். இந்தப் புத்தாண்டில் அனைத்து தமிழர்களும் தங்கள் உள்ளூர் உறவினர்களோடு கொண்டாடி மகிழும் நாள். புதுவை மாநிலத்தில் தமிழ்ப் புத்தாண்டு அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளை விசு திருநாளாக கொண்டாடி மகிழும் மலையாள சகோதர, சகோதரிகளுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இனிய நன்னாளில் புதுவையில் வாழும் விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட சமுதாயத்தினர், மலைவாழ் மக்கள், மீனவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் அனைவரின் வாழ்விலும் வளம் பொங்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்”.

அமைச்சர் நமச்சிவாயம்

“பாரம்பர்யம் மிக்க புனிதமான கலாசாரத்தைப் பின்பற்றி மனித குலத்துக்குப் பெருமை சேர்த்து நல்வழி காட்டுகின்ற தமிழர்கள், சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். புதிதாய் பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டில் இலக்கை நோக்கி பயணித்து, புதுவை மாநிலத்தின் தனித்தன்மையை காத்து நின்று, உரிமைகளை நிலைநாட்டி மாநில நலன் காக்க இந்நன்னாளில் உறுதி ஏற்போம். தமிழ் சமுதாய மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.

அமைச்சர் ஷாஜகான்

“புதுவை மாநில மக்களுக்கும் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என் இனிய சித்திரை ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் அளவிலா ஆனந்தம் அடைகிறேன். சுத்தம், சுகாதாரம் பசுமை வளங்கள், நீர்நிலைகள் இவை அனைத்தும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் ஆகும். இதை நாம் அனைவரும் கருத்தில்கொண்டு இந்த தமிழ்ப் புத்தாண்டில் இவற்றை மேம்படுத்த சபதமேற்று நமது புதுவை மாநிலத்தை பசுமைகள் நிறைந்த சுத்தம், சுகாதாரமான மாநிலமாக மாற்ற அயராது பாடுபடுவோம் என்று கூறி என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

ராதாகிருஷ்ணன் எம்.பி.

“சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.

அதுபோல் மலையாள மக்களின் வருடப்பிறப்பான விஷூ பண்டிகை நல்வாழ்த்துகளைப் புதுவையில் வசிக்கும் மலையாளப் பெருமக்களுக்கும், மாகி பகுதி மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

கோகுலகிருஷ்ணன் எம்.பி.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017