மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

புதிய முறையில் அசத்திய சுனில் நரேன் !

புதிய முறையில் அசத்திய சுனில் நரேன் !

ஐ.பி.எல். சீசன் 10-ன் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிரடி காட்டிய வோரா 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும், தொடக்க வீரர் அம்லா 25 ரன்னிலும், கேப்டன் மேக்ஸ்வெல் 14 பந்தில் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 18வது ஓவரில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர், 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பீர், நரேன் தொடக்கம்முதலே அதிரடியாக விளையாடினர். பவர்ப்ளேயில் மட்டும் கொல்கத்தா அணி 72 ரன்களைக் குவித்தது. இதுவே பவர்ப்ளேவில் கொல்கத்தாவின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி வீரர் லியன் போட்டிகளில் காயம் காரணத்தால் விலகியுள்ளார் என்பதால் நேற்றைய போட்டியில் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்ப்பு அதிகப்படியாக இருந்தது. சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதிரடியாக விளையாடிய நரேன் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 37 ரன்களைக் குவித்தார். அவர் ஆட்டமிழந்ததும் காம்பீருடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் வேகம் உயர்ந்தது. 16 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த உத்தப்பா, அக்சர் படேல் பந்துவீச்சில் அவுட்டானார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017