மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

வடகொரியாமீது தாக்குதல்: டிரம்ப்

வடகொரியாமீது தாக்குதல்: டிரம்ப்

அணு ஆயுத சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு, அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்தநிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையை வடகொரியா புறக்கணித்ததையடுத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அரசு தயங்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்கா, வடகொரியாவை அச்சுறுத்தும்விதமாக தனது கடற்படையை கொரிய தீபகற்பத்தை நோக்கி அனுப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும்பட்சத்தில், அந்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று, வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தும்பட்சத்தில், அதன் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொரிய தீபகற்பத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தும் பகுதிக்கு 250 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கனரக குண்டுவீச்சு படைகளும் தயார்நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், வடகொரியா மீது தாக்குதல் நடத்துவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017