மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ஏற்றம் கண்ட ஏற்றுமதியும் இறக்குமதியும்!

ஏற்றம் கண்ட ஏற்றுமதியும் இறக்குமதியும்!

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 27.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல, நாட்டின் இறக்குமதியும் 45 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் பெட்ரோலியம், ஆடைகள், இன்ஜினியரிங், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் துறையில் ஏற்றுமதி வர்த்தகம் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் பலனாக, கடந்த மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் 2,923 கோடி டாலர் அளவுக்கு நிகழ்ந்துள்ளது. இது, 27.6 சதவிகித உயர்வாகும். அதேபோல, கடந்த மார்ச் மாதத்தில் இறக்குமதியும் 45.25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதி மதிப்பு 3,966 கோடி டாலராகும். கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது 2,730 கோடி டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதியில் தங்கம் மட்டும் 411 கோடி டாலராகும். இது, முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்தைவிட 329 சதவிகிதம் கூடுதலாகும். தங்கம் இறக்குமதி அதிகரித்ததால் வர்த்தக பற்றாக்குறை 1,043 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 440 கோடி டாலராக மட்டுமே இருந்தது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஏழு மாதங்களாக ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. நாட்டிலுள்ள 30 துறைகளில் 25 துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017