மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சர்வதேச வாகன விற்பனை : இந்தியாவின் நிலை என்ன?

சர்வதேச வாகன விற்பனை : இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் பயணிகள் வாகன விற்பனை 7 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில் பயணிகள் வாகன விற்பனை வளர்ச்சியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல, ஒட்டுமொத்த விற்பனையில் ஐந்தாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் 2,43,76,902 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய 2015ஆம் ஆண்டில் விற்பனையான 2,12,10,339 வாகனங்களைவிட 14.93 சதவிகிதம் கூடுதலாகும். இதன்மூலம், சர்வதேச அளவில் பயணிகள் வாகன விற்பனையில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவில், 2016ஆம் ஆண்டில் 29,66,637 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது, 2015ஆம் ஆண்டில் விற்பனையான வாகனங்களைவிட 7 சதவிகிதம் கூடுதலாகும். இதனால் பயணிகள் வாகன விற்பனையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கையில் இந்தியா ஐந்தாமிடத்தில் உள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017