மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

லக்கியை இழந்து அன்லக்கியான குடும்பம்!

லக்கியை இழந்து அன்லக்கியான குடும்பம்!

மும்பையில் எஜமானியை காப்பாற்றுவதற்காக, தனது உயிரைவிட்ட நாயின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் சயான் கோலிவாடா பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (23). மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, எதிர்வீட்டில் இருக்கும் ஜோதி என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்நிலையில், வெங்கடேஷ் தனியாகப் பேச வேண்டும் என ஜோதியை கோயிலுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, ஜோதி தனது அண்ணி ரோஷியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ரோஷி, வெங்கடேஷிடம் ஜோதியை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் காதலை கைவிடுமாறும் எச்சரித்துள்ளார். அப்போது மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் ஜோதியை தாக்க முயன்றுள்ளார். இதைத் தடுக்கமுயன்ற ரோஷியையும் தாக்க முயற்சிசெய்துள்ளார்.

இந்நிலையில், ரோஷி அந்தப் பகுதியில் வசித்துவரும் சுமதி (26) என்பவரின் வீட்டுக்குள் நுழைந்தார். சுமதி, வெங்கடேசை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுமதியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

இதையெல்லாம் வீட்டுக்குள்ளிருந்து கவனித்த சுமதியின் செல்ல நாய் லக்கி, பாய்ந்து சென்று வெங்கடேஷின் காலை கவ்வியது. அவருடைய கையிலிருந்து கத்தியை தட்டிவிட்டு சுமதியை காப்பாற்ற நினைத்தது. இதற்காக வெங்கடேஷ் கையையும் கவ்வ முயன்றது. இதனால் அச்சமடைந்த வெங்கடேஷ், கத்தியால் நாயை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பலத்த காயமடைந்த லக்கியை தூக்கிக்கொண்டு சுமதி அருகிலுள்ள விலங்குகள் நல மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாகவே லக்கி இறந்துவிட்டது. இதுதொடர்பாக, வெங்கடேஷ் மீது கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து அண்டோப்ஹில்ஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017