மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ரூல்ஸை மாற்றியது யூடியூப்!

ரூல்ஸை மாற்றியது யூடியூப்!

வீடியோ பதிவில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் யூடியூப் இணையதளத்தில் வீடியோவை பதிவேற்றி பலர், அதில் கிடைக்கும் விளம்பரம் மூலம் வருமானம் பார்த்துவந்தநிலையில், தற்போது யூடியூப் நிறுவனம் விளம்பரம் வெளியிடுவதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 10000 பார்வையாளர்களுக்கு குறைவான பார்வையாளர்களைப் பெற்றுவரும் வீடியோக்களுக்கு இனி விளம்பரத்தை நிறுத்த யூடியூப் முடிவு செய்தது. இதனால் காப்பி செய்த வீடியோக்கள் மூலம் வருமானம் பார்த்தவர்களை முற்றிலும் ஒதுக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில நிறுவனங்கள், தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றிவருவதாகவும், இதுபோன்ற விளம்பர யுக்தி மற்றும் பிறருடைய வீடியோவை காப்பி செய்து பதிவு செய்யப்படும் வீடியோக்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து யூடியூப் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்த செய்தியில் இந்த நடவடிக்கையின் மூலம் தகுதியான சேனல்கள் மட்டுமே யூடியூப்பில் அனுமதிக்கப்படும் நிலை வரும். அந்தவகையான சேனல்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாக மதித்தாலேபோதும் என்று அவர் கூறியுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017