மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

தமிழகத்தில் பாஜக காலூன்றும் : தமிழிசை

தமிழகத்தில் பாஜக காலூன்றும் : தமிழிசை

தமிழகத்தில் நிச்சயமாக பாஜக காலூன்றும் என, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, பணமில்லா பரிவர்த்தனைக்கு உதவும் செயலியான பீம் ஆப் அம்பேத்கர் பெயரில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. அவரின் பிறந்தநாளை ஒரு வருடம் முழுவதும் மத்திய அரசும், பாஜக-வும் கொண்டாடியுள்ளோம். சமூக நீதியை பாதுகாக்கும் கட்சியாக பாஜக உள்ளதால் விரைவில் தமிழகத்தில் பலம் பொருந்திய கட்சியாக பாஜக மாறும்.

தமிழகத்தைப் பொருத்தவரை, நிர்வாகத் திறமையற்ற ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கு ஒரு அமைச்சர் உள்ளாகிறார். ஆனால் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என ஆளுங்கட்சி துணை பொதுச்செயலாளர் கூறுகிறார். ஆக, ஊழலை பொதுவிதியாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது.

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆனால் பல் மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டது என அறிவித்துள்ளது. ஆக, தமிழக அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதிபெற்றதா? இல்லையா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

மேலும் அவர் விவசாயிகள் பிரச்னை பற்றி கூறும்போது, அது மாநில அரசின் பிரச்னை. மாநில அரசுதான் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கனவே உத்தரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாநில அரசே பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசின் பயிர்ப் பாதுகாப்புத் திட்டத்தில் 50 லட்சம் விவசாயிகள் வரை பதிவுசெய்து பயன்பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெறும் 13,000 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இது, மாநில அரசின் தோல்வி முகத்தைக் காட்டுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017