மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

இன்ஃபோசிஸ் : 37,915 பேர் வெளியேற்றம்!

இன்ஃபோசிஸ் : 37,915 பேர் வெளியேற்றம்!

கடந்த 2016-17 நிதியாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 37,915 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கை 65 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நடந்துமுடிந்த 2016-17ஆம் நிதியாண்டின் ஜனவரி - மார்ச் வரையிலான நான்காவது காலாண்டின் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. அதில், நிறுவனத்தின் லாப விவரங்களை வெளியிட்ட இன்ஃபோசிஸ், நிறுவனத்தில் பணிவிலகல், பணிநீக்கம், ஆட்சேர்ப்பு ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவித்தது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்திலிருந்து 37,915 பேர் வெளியேறியுள்ளனர். இது, முந்தைய ஆண்டைவிட 19 சதவிகிதம் கூடுதலாகும். இதற்கு முந்தைய 2015-16ஆம் நிதியாண்டில், 34,688 பேர் வெளியேறியிருந்தனர்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கையைப் பொருத்தவரையில், கடந்த 2016-17 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 6,320 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2015-16ஆம் நிதியாண்டில் பணியில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,857. எனவே, கடந்த ஆண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 65 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் ஜனவரி - மார்ச் காலாண்டில் பணியில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 601. ஆனால், 2015-16 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 661 பேர் பணியில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017