மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

உருது மொழியில் நீட் தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

உருது மொழியில் நீட் தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் உருது மொழியிலும் நடத்த வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் மே 7ஆம் தேதி, 103 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வை ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட 10 மொழிகளில் எழுத வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்களின் தாய்மொழியான உருது மொழியிலும் நீட் தேர்வை எழுத அனுமதி அளிக்க வேண்டும் என மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு தழுவிய அளவில் அதிக மக்கள் பேசும் மொழி உருது. ஆனால் உருது மொழியை புறக்கணித்துவிட்டு, ஏழாவது மொழியாக உள்ள குஜராத்தியையும், பன்னிரண்டாவது மொழியாக இருக்கும் அசாமி மொழியையும் இணைத்திருப்பது நியாயமற்றது. ஏற்கெனவே, உருது மொழியிலும் நீட் தேர்வுகளை எழுதுவதற்கு மராட்டியம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த மார்ச் 2ஆம் தேதி நீதிபதி பானுமதி, நீதிபதி குரியன் ஜோசப் முன்னிலையில் வந்தது. அப்போது, அவசர வழக்காக இதை விசாரிக்க மறுத்துவிட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில், சி.பி.எஸ்.இ., ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் மறுவிசாரணை, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தன கவுடர் அடங்கிய அமர்வு நேற்று (ஏப்ரல் 13) வந்தது. அப்போது நீதிபதிகள், 'வரும் 2018 - 19ஆம் கல்வியாண்டு முதல், நீட் நுழைவுத் தேர்வை உருது மொழியிலும் நடத்திட வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017