மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சச்சின் படைத்த புதிய சாதனை!

சச்சின் படைத்த புதிய சாதனை!

கிரிக்கெட் உலகில் ஜாம்பவான்கள் என சிலர் போற்றப்படுவது வழக்கம். காரணம், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் விளையாடிய சிறப்பான ஆட்டங்கள் அவருக்கு அந்த மதிப்பை பெற்றுத்தந்திருக்கும். ஆனால் தொடர்ந்து மூன்று தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்ததாலும், இந்திய அணியின் பெரும்பான்மையான போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சச்சின், இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கே மிகப்பெரும் பொக்கிஷம் என்றே பெரும்பாலான நபர்களால் போற்றப்பட்டார். God of cricket என அழைக்கப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவரது வாழ்க்கை வரலாறாக பாடநூலில் இடம்பெற்றது. ஆனால் அதில் அவரது ஆரம்பகால வாழ்க்கை பற்றிய குறிப்புகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். எனவே, அவரின் முழுக் கதையும் திரைப்படமாக மாற்றப்பட்டு நேற்று அதன் டிரைலர் வெளியாகி சுமார் 50 லட்சம் பார்வையாளர்களை அதற்குள் எட்டியுள்ளது.

சச்சினின் ஆரம்பகால வாழ்க்கை முதல் அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், உண்மை வீடியோ தொகுப்புகள் போன்றவையும் இந்த டிரைலரில் இடம்பெற்றிருந்தது, பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. சச்சின் வந்தால் சொல்லுங்க நான் கிரிக்கெட் பார்க்க வருகிறேன் என சிறுவயதில் தோனி கூறியதாக இந்த டிரைலரில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தளவுக்கு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற வீரர் இவர். வாழ்க்கையில் இடையே ஏற்பட்ட சில சிக்கல்கள் பற்றியும், அதிலிருந்து சச்சின் எவ்வாறு மீண்டு வந்தார் என்பது பற்றியும் இந்த திரைப்படத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். பின்னணி இசையை சிறப்பாக அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பிரிந்த தருணத்தில் ரசிகர்கள் சச்சின்.... சச்சின்... என இடி முழக்கம்போல் கூச்சலிட்டு மைதானத்தை அதிரவைத்ததை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர் டிரைலரில்.

Sachin A Billion Dreams

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 14 ஏப் 2017