மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட கர்ணன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட கர்ணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில், கொல்கத்தா மாநில உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி கர்ணன் தடைவிதித்தார். இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து, அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியது. இது தொடர்பாக நீதிபதி கர்ணன், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் கடிதங்களை அனுப்பினார். கர்ணனின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. மேலும் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று இரண்டுமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, கர்ணன் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.14 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார். நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், கர்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, மேற்குவங்க காவல்துறை அதிகாரிகள் கர்ணன் வீட்டுக்கு வந்து பிடிவாரண்ட் உத்தரவைக் கொடுத்தபோது அதை வாங்க மறுத்தார்.

இதையடுத்து, நீதிபதி கர்ணன் மார்ச் 31ஆம் தேதி டெல்லி உச்சநீதிமன்றத்தின் தனி அறையில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் அடங்கிய அமர்வுமுன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அப்போது நீதிபதிகள், கர்ணனின் விளக்கம் தெளிவில்லாமலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது. அதனால், அவர் நான்கு வாரங்களுக்குள் எழுத்துபூர்வமாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நீதிபதி கர்ணன், கொல்கத்தாவில் உள்ள தனது நீதிமன்ற உறைவிட இல்லத்தில் ஏப்ரல் 13ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் அமர்வு, தன்னை வேண்டுமென்றே அவமதித்தனர். அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டம் 1989-ஐ மீறிவிட்டனர். இதுதொடர்பாக, எனது குற்றச்சாட்டுக்கு தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு அவர்களிடம் கூறியுள்ளேன். அவர்கள் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி, எனது ரோஸ்டேல் உறைவிட நீதிமன்ற இல்லத்தின் முன்பாக 7 நீதிபதிகளும் ஆஜர் ஆவார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்ட மீறலுக்காக அவர்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனை பற்றிய தங்களது கருத்துகளைக் கூறுவார்கள்’ என்று கூறினார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017