மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

தமிழ்ப் புத்தாண்டு : தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி

தமிழ்ப் புத்தாண்டு : தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தமிழில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ, பைசாகி, வைசாகாதி போன்றவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சித்திரை முதல் நாளான இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். புத்தாண்டையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஏராளமான மக்கள் கோயில்களிலும் வீடுகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘என் தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

சட்டமேதை அம்பேத்கரின் 126வது பிறந்த நாள் விழாவும் இன்று ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு பிரதமர் மோடி இன்று ஏப்ரல் 14ஆம் தேதி வருகைபுரிகிறார். நாக்பூரில் ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), ஐ.ஐ.எம். (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்), எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கோரடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி, ஏப்ரல் 13ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி நாக்பூர் வருவதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் நாக்பூரில் அம்பேத்கருடன் நெருங்கிய தொடர்புடைய புனிதத் தலமான தீக்‌ஷ பூமியில் பிரார்த்தனை செய்வேன்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கோரடி அனல் மின் நிலையத் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அம்பேத்கரின் கனவான உறுதியான, செழிப்பான மற்றும் உள்ளார்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஒருபோதும் நாங்கள் தடுமாற மாட்டோம் என்று மோடி கூறியுள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017