மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பெண் காவலர்களுக்கு பதவி உயர்வு!

பெண் காவலர்களுக்கு பதவி உயர்வு!

தமிழக காவல் துறையில் பெண் உதவி ஆய்வாளர்கள் 104 பேருக்கு ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் ஆயுதப் படை, தாலுகா காவல் நிலையங்கள், சிபிசிஐடி, குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறை, நுண்ணறிவுப் பிரிவு, ரயில்வே உள்ளிட்ட பிரிவுகளில், பணியில் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர்களுக்கு பல ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு, தமிழக காவல் துறையில் 900 பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில் பணி அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக காவல் துறையில் 2004ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர்கள் 104 பேருக்கு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, நெல்லை, மதுரை, சேலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம் என பெரும்பாலானோருக்கு அவர்கள் பணிபுரிந்த இடங்கள் மற்றும் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே ஆய்வாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் இருக்கும் பல பெண் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017