மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் : ஏ.ஆர்.முருகதாஸ்

உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் : ஏ.ஆர்.முருகதாஸ்

தேசிய விருதுகள் குறித்து, தான் கூறிய கருத்துபற்றி வீணாக விவாதிக்காமல், உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில், 2016ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பல தமிழக தொழில்நுட்பக் கலைஞர்கள் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தேசிய விருதுகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘தேசிய விருதுகளுக்கான நபர்கள் ஒருதலைபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது’ என விமர்சனம் செய்திருந்தார். முருதாஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தன் படத்துக்கு விருது கிடைக்காத கோபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படியெல்லாம் பேசுகிறார் என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

முருகதாஸின் கமெண்ட் குறித்து பத்திரிகையாளர் ஸ்ரீதர் பிள்ளைக்கு அளித்த பேட்டியில், இந்த வருட தேசிய விருதுகள் குழுவின் தலைவராக இருந்த பிரியதர்ஷன் 'அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற மதிப்புக்குரியவர்கள் தேர்வுக் கமிட்டியில் இருந்திருக்கின்றனர். பால்கே விருது முதல் பல விருதுகளைப் பெற்று கோபாலகிருஷ்ணன் தன்னை ஒரு படைப்பாளியென நிரூபித்திருக்கிறார். அவரது கருத்து மதிக்கத்தக்கது. ஆனால் தனது வாழ்க்கையில் கொஞ்சமும் நல்லதாக எதையும் செய்யாமல், மூன்றாம் தர ஆக்‌ஷன் படங்களை எடுத்தவர்கள் எல்லாம் அவரைப்பற்றி விமர்சிக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். அக்‌ஷய் குமார் முருகதாஸுக்கு கால்ஷீட் கொடுக்காததால், அவருக்கு விருது கொடுத்தது முருகதாஸுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், கஜினியைத் தவிர முருகதாஸின் வேறு படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் மற்றவர்களிடம் அவரது படத்தைப் பற்றி கேட்கும்போது, அவரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றுதான் சொல்வார்கள்' எனக் கூறியிருந்தார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017