மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

மக்களை கேடயமாக பயன்படுத்துவதா? : ஒமர் அப்துல்லா கண்டனம்

மக்களை கேடயமாக பயன்படுத்துவதா? : ஒமர் அப்துல்லா கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனத்தை காப்பதற்காக ஜீப் முன் ஒரு இளைஞனை கட்டிச் சென்றது மிகவும் வருத்தமளிப்பதாக ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஏப்ரல் 14ஆம் தேதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில், கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 112 பேர் கொல்லப்பட்டனர். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, பொது மக்கள் பலியாவதைத் தடுக்க பெல்லட் துப்பாக்கி பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. கலவரச் சூழலில் கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் ஆபத்தில்லா ஆயுதப் பட்டியலில் உள்ளது இந்த பெல்லட் துப்பாக்கி.

இந்நிலையில், 2010 கலவரத்துக்குப் பின்னர் ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது சிற்சில மோதல்களும், போராட்டமும் நடந்து வந்தன என்றாலும், பெரிய அளவில் போராட்டமும் வன்முறையும் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டுதான் மீண்டும் வெடித்தது. கடந்த ஜூலை 9ஆம் தேதியன்று, பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று குற்றம்சாட்டப்பட்ட 23 வயது இளைஞரான புர்ஹான் வானி-யை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பிரிவினைவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய புர்ஹான் வானி-யால், காஷ்மீரின் நீண்டகாலப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என மக்கள் எதிர்நோக்கி இருந்தநிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டதை காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் போராட்டம் பெருமளவில் வெடித்தது. புர்ஹான் தீவிரவாத அமைப்பின் தளபதி என்று ராணுவத் தரப்பில் கூறினாலும், உண்மையில் அவர் அந்த அமைப்பின் ஆதரவாளராக மட்டுமே இருக்க முடியும். தீவிரவாதி அல்ல என்பது ஸ்ரீநகர் பொதுமக்களின் கருத்தாகவுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017