மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

போராடுவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது : ஹெச்.ராஜா

போராடுவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது : ஹெச்.ராஜா

கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் கௌதமனை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

மேலும் போராட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில பல்வேறு இடங்களில் பலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதேபோல், தஞ்சையில் தொடர்ந்து 18 நாட்களாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று) இயக்குநர் கௌதமன் மற்றும் சிலர் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இவர்களின் போராட்டத்தை அறிந்த காவல் துறையினர் இவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது கௌதமனின் போராட்டம் குறித்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017