மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

குஜராத்தில் புதிய திட்டங்கள் தொடக்கம் : மோடி

குஜராத்தில் புதிய திட்டங்கள் தொடக்கம் : மோடி

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, அவருக்கு இருந்த ஆதரவு காரணமாக 2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். அதன்பின், இதுவரை அவர் பத்து முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், வருகிற 17ஆம் தேதி 11வது முறையாக குஜராத் மாநிலத்துக்குச் செல்கிறார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு மீண்டும் பாஜக ஆட்சியை ஏற்படுத்த மோடியின் பயணத் திட்டங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

குஜராத்திலிருந்து மோடி சென்றபிறகு பாஜக மீது அம்மாநில மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சக்திவாய்ந்த பத்தார் இன மக்களும், தலித் இன மக்களும் பாஜக-வுக்கு எதிரான மனநிலையில் தற்போது உள்ளனர். இதனால்தான் சில மாதங்களுக்குமுன்பு குஜராத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து, தற்போது குஜராத் மாநில விவகாரங்களில் பிரதமர் மோடி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். மக்களை மீண்டும் கவர்வதற்காக பல்வேறு புதிய திட்டங்களை அங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017