மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ஆப்கானிஸ்தானில் பேரழிவு குண்டுவீச்சுக்கு டிரம்ப் பாராட்டு!

ஆப்கானிஸ்தானில் பேரழிவு குண்டுவீச்சுக்கு டிரம்ப் பாராட்டு!

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினர் வசிக்கும் பகுதியில் அமெரிக்கப் படையினர் அணுகுண்டுக்கு நிகரான பேரழிவு குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஆசின் மாவட்டத்தில் உள்ள நங்கர்ஹார் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் அதிகம் வசித்துவந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 7.30 மணியளவில், அமெரிக்கப் படை ஜிபியு - 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது.

அனைத்து குண்டுகளுக்கு எல்லாம் தாய் (மதர் ஆப் ஆல் பாம்) எனக் கருதப்படும் 21,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சர்வதேச போர் நடைபெறும் பகுதிகளின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதலை இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது நடத்திய அணுகுண்டு தாக்குதலோடு ஒப்பிடுகின்றனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017