மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் 6.50 லட்சம் பேர் பங்கேற்பு!

சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் 6.50 லட்சம் பேர்  பங்கேற்பு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைகளில் 15,664 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு வருகிற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த எழுத்துத் தேர்வில் தமிழகம் முழுவதுமிருந்து 6.50 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.

இதில் சென்னையில் 47,400 பேரும், மதுரையில் 43,300 பேரும், திருநெல்வேலியில் 34,000 பேரும், திண்டுக்கல்லில் 22,000 பேரும், விருதுநகரில் 29,000 பேரும், கன்னியாகுமரியில் 20,000 பேரும், தேனியில் 19,000 பேரும், தூத்துக்குடியில் 16,000 பேரும், ராமநாதபுரத்தில் 15,000, பேரும் சிவகங்கையில் 12,000 பேரும் நீலகிரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில் தலா 4,000 பேரும் பங்கேற்கவுள்ளனர்.

தேர்வில் பங்கேற்பவர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வெழுத மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொண்ட தேர்வு மையங்களை கண்டறியும் பணியில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

காவலர் தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு 20 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். இதில் 15 மதிப்பெண்கள் உடற்தகுதிக்கும், 5 மதிப்பெண் தேசிய மாணவர் படை உள்ளிட்ட சிறப்பு சான்றிதழ்களுக்கும் வழங்கப்படும்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017