மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்கள்! - அப்டேட் குமாரு

கீர்த்தி சுரேஷ் வாழ்த்துக்கள்! - அப்டேட் குமாரு

ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம், இன்னொரு பக்கம் ஜி.எஸ்.டி, அதுக்கும் அந்தாண்ட நீட் தேர்வு, உ.பி-ல ரிசர்வேஷனுக்கு ஆப்பு. எந்த பிரச்னைக்கு போராடுறதுன்னு குழப்பத்துல வீட்ல இருந்து கிளம்புனவங்க நேரா கீர்த்தி சுரேஷ் வந்த கடை திறப்பு விழாவுக்கு போய் சிறப்பிச்சிருக்காங்க. இதுல கூட்டத்தை கலைக்க வந்த போலீஸ் கிட்ட பொதுமக்கள் மேல கையை வெச்சிடுவியா நீ-ன்னு பஞ்ச் டையலாக் வேற. திருப்பூர்ல டாஸ்மாக்குக்கு எதிரா போராடுனவங்கள்ல ஒருத்தங்களை அடிச்சதுக்குண்டான தண்டனையை போலீஸுக்கு குடுத்துட்டாங்க. மத்தபடி, இன்னைக்கு தெறி ஒரு வருஷத்தைக் கொண்டாடுறதா? பைரவாவை அதுக்குள்ள டிவி-ல போட்டுட்டாய்ங்களேன்னு இவங்களை திட்றதான்னு தெரியாம திகைச்சு நிற்கும் விஜய் ரசிகர்களைப் பத்தி நான் எதும் சொல்ல விரும்பல. அப்டேட்ல பாருங்க.

//தீரன் விஜயவர்மன்

ப்ரியா இருக்க சாமிய யாரும் கண்டுக்க மாட்றாங்க... பார்க்கிங், தரிசனம், அர்ச்சனை எல்லாத்துக்கும் காசு புடுங்குற இடத்துல தான் கூட்டம் அல்லுது.

காச குடுத்துட்டு வந்த பாமரனின் புலம்பல்//

//Mohamed Muqthar

ஆபிஸ் வர டைம்ல செம்ம தூக்கம் வர்றதும்... ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு போற டைம்ல தூக்கம் சுத்தமா கலஞ்சி போறதும் பெரிய கொடும...//

//நீலா நீலவண்ணன்.

.தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்னா அதிமுகன்னு சொல்விங்க.

சித்திரை முதல்நாள் வாழ்த்து சொன்னா திமுகன்னு சொல்விங்க...

அதனால விடுமுறை நாள் வாழ்த்துக்கள்...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்.//

//சிவ சிவா

திருமணத்திற்கு முன் இருக்கும் சுதந்திரம் திருமணத்திற்குப்பின் குறையவே குறையாது என்று மார்தட்டிய ஆண்களில் நானும் ஒருவன்.

தற்போது தட்டிய கைகளத் தேடிக்கொண்டிருக்கிறேன். . .//

//Shan Karuppusamy

ஏடிஎம்மில் பணம் எடுக்க வரம்பு இல்லை, ஆனால் ஏடிஎம்மில் பணம்தான் இல்லை என்ற கதைதான் இவர்கள் வாரி வழங்கும் இலவச டேட்டாவும்.//

//Abdul Vahab

சேலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு காவல்துறை கயிறு கட்டி ரசிகர்களை கட்டுப்படுத்தியது

பேஸ்புக் தாண்டி ஒரு அழகான உலகம் இருக்குன்னு இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு அடிக்கடி நினைவூட்டுகிறது.

அனைவருக்கும் இனிய கீர்த்தி நல்வாழ்த்துகள்//

//Mansoor Mohd

சாமி 8 in 1 surround speaker வச்சு சினிமா பாட்டு போடனும்னு மக்கள்கிட்ட கேட்டுச்சா?

பங்குனி பொங்கல் அலப்பறைகள்//

//Thippu Sulthan K

அவனவன் இங்க சைக்கிளுக்கு வாடக குடுக்க முடியாம இருக்கான்...

பாஸ்ட் எயிட் ல இவிங்கே காரா போட்டு ஒடச்சிட்டு இருக்காங்கே..

அப்பரம் எப்புடி இந்தியா வல்லரசு ஆவும்//

//Boobathi Kalaivanan

படம் ஆரம்பிக்கும் போது போட்ட ஸ்டேட்ஸ் முடிஞ்ச அப்புறம் தான் அப்டேட் ஆகி இருக்கு//

//Ramprasad AK

கீர்த்தி சுரேஸ்கெல்லாம் #கூட்டத்த கூட்டி அடி வாங்கி அசிங்கப்பட்டு வர அளவுக்காய்யா காஞ்சு போய் கிடக்கீங்க சேலம் மக்கா //

//தீரன் விஜயவர்மன்

லீவ் நாள்ல வெட்டியா இருக்க நானே நாலு ஸ்டேட்டஸ் தான் போட்டுருக்கேன்... லீவே எடுக்காம 24 மணி நேரமும் வேலை செய்யுற நம்ம மோடி 20க்கு மேல போட்டுருக்கார்...

வேலையே டிவிட்டர்ல தான் போல//

//ரா புவன்

2017ல தமிழனுங்க 2 வகைதான்.

1. நேத்து கத்திப்பாரால போராட்டத்துக்கு ஒண்ணு கூடி டிராபிக்ஜாம் பண்ணவங்க.

2. இன்னைக்கு சேலத்துல நடிகை கீர்த்திசுரேஷை பார்க்கக்கூட்டமா வந்து டிராபிக் ஜாம் பண்ணவங்க.

ஆக மொத்தம் தமிழனுக்கும் டிராபிக் ஜாமுக்கும் இடையிலான உறவு விடவே விடாது..//

//Lalitha Murali

திருட்டுத்தனமா ஆர்டர் பண்ண பொடவைய வீட்டுல புருஷர் இருக்கப்பத்தான் கொண்டாரணுமா கொரியர் மேன்..//

//கிருஷ்ணா அறந்தாங்கி

ராகவா லாரன்ஸை, இனி பேய்ப் படத்துல நடிக்க விடாம யாராவது ஸ்டே ஆர்டர் வாங்கினா தேவலை//

//Jaya Prabha

பைரவா பாக்கறதா? கத்தி பாக்கறதா?

டெலிகேட் பொஸிஷன் //

//Varavanai Senthil Kumar

பெரியாரின் உடல் ராஜாஜி அரங்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. செய்தி கேள்விப்பட்டு காரில் வந்த எம்.ஆர்.ராதா வரும் அண்ணாசாலையில் காரை நிறுத்தி அதன் வியூ பைண்டர் கண்ணாடியைப் பார்த்து காரிலேயே ஷேவிங் செய்கிறார். திகைத்த ட்ரைவரிடம் "நாடகக்காரன்ன்னு நம்மள நாலு பேரு வாய பொளந்து பார்ப்பான். மரணம்ங்கிறது இயற்கை. சிரைக்காம போன மட்டும் அய்யா வந்துடவா போறாரு" எனச் சொல்லியவாறு கிளம்பி போகிறார்.

எம்ஜிஆர் பெரியாரின் உடல் அருகே வருகிறார்.இந்தப்பக்கம் ராதா நிற்கிறார். எம்ஜிஆர் பெரியாரின் உடலைப்பார்த்து அழுகிறார்."ராமச்சந்திரா..நிஜமாத்தான் அழுறீயா" என ராதா நக்கலாய் கேட்க வழக்கம் போல முகத்தை பொத்திக்கொண்டு அழுதபடி அந்த இடத்தை விட்டு அகலுகிறார் எம்.ஜி.ஆர் .

தன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கலகக்காரனாகவே வாழ்ந்த 'ரெபல்' எம்.ஆர்.ராதாவின் பிறந்தநாள் இன்று. அண்ணல் பிறந்ததினத்தில் பிறந்து அய்யா பிறந்தநாள் அன்று மறைந்தார்.//

//Theesan Ramanathan

அறிவுகெட்டவனுங்களா சிங்கிள் டாய்லெட் ரூம்ல சென்சார் லைட் வச்சிருக்கிங்களே!.,, ஆடிகிட்டேவா போகமுடியும்?//

//வாசுகி பாஸ்கர்

புத்த மதத்துக்கு மாற போகிறார் அம்பேத்கர் என்கிற செய்தி கசிய ஆரம்பித்ததும், பதறி போய் இந்து மகா சபை பிரதிநிதிகள் அம்பேத்கரை சந்தித்து, அந்த திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

அவர்களுக்கு இரண்டு ட்விஸ்ட் வைத்தார், டாக்டர். அம்பேத்கர்,

ஒன்று;

"நாடறிந்த தலித் தலைவர்களில் ஒருவரும், சாதி இந்துகளாலேயே மிகச்சிறந்த இந்துவாகப் போற்றப்படுபவர் கே.கே.சகத். அவரை ஒரு வருடத்துக்கு மராட்டிய சங்கராச்சாரியராக தேர்வு செய்து விடுங்கள்.

இரண்டு;

சித்பவான் பிராமணர்கள் வந்து அவருக்கு பாதபூஜை செய்யட்டும். அதன் மூலம் இந்து சமுகத்தில் எந்தவித ஏற்ற தாழ்வும் கடைபிடிக்க படுவதில்லை என்பதை நிரூபியுங்கள், உடனடியாக மத மாற்ற திட்டத்தை நிறுத்தி வைக்கிறேன் என்றார்"

அன்னைக்கி போனவனுங்க தான் இந்து மகா சபா காரனுங்க, இன்னைக்கி வரைக்கும் ரிட்டர்ன் வரலை...//

-லாக் ஆஃப்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017