மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் : சென்னைக்கு வருகை!

ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் : சென்னைக்கு வருகை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் ஏப்ரல் 15ஆம் தேதி சென்னைக்கு வருகிறது.

ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் 2016ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி இந்திய கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மும்பையில் உள்ள மஸாகோன் கப்பல் கட்டும் பணிமனையில் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல், மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையின்கீழ் இயங்கி வருகிறது. முழுக்க, முழுக்க இந்திய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் ஏப்ரல் 15ஆம் தேதி நாளை சென்னைக்கு வருகிறது. இந்தக் கப்பல் வெள்ளம், புயல் போன்ற காலங்களில் உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல பெரிதும் பயன்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சிகள் சென்னை துறைமுகத்தில் நடக்கிறது. இந்தக் கப்பலை பார்ப்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி நாளை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை சென்னை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக மின் அலங்காரத்துடன் நிறுத்திவைக்கப்படுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017