மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சில்வஸ்டர் ஸ்டாலனை ஏமாற்றிய வார்னர் பிரதர்ஸ்!

சில்வஸ்டர் ஸ்டாலனை ஏமாற்றிய வார்னர் பிரதர்ஸ்!

வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 94 வருடங்களாக படங்களைத் தயாரித்து வருகிறது. ஆனால் அந்தப் பெருமையை கெடுத்துக்கொள்ளும்விதமாக அந்நிறுவனம் செய்த செயல் ஹாலிவுட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.

நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனைப் பற்றி அவரது ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். எதை வேண்டுமென்றாலும் அவர் தாங்கிக் கொள்வார். ஆனால் துரோகத்தை மட்டும் அவரால் தாங்கிக்கொள்ளவே முடியாது. தனக்கு துரோகம் செய்தது ஒரு நாடாக இருந்தாலும், தனி ஆளாகச் சென்று ராக்கெட் லாஞ்சரும், ஹெலிகாப்டரையும் வைத்து துவம்சம் செய்துவிடுவார். அப்படிப்பட்ட ஒருவர், தனக்கு சேரவேண்டிய பணத்தை ஏமாற்றிய வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை சும்மாவிடுவாரா?

24 ஆண்டுகளுக்கு முன்பு சில்வஸ்டர் ஸ்டாலன் நடிப்பில் வெளியான படம் டெமாலிஷன் மேன். இந்த திரைப்படத்தை வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து சில்வஸ்டர் ஸ்டாலனின் ரஃப் மார்பில் நிறுவனமும் தயாரித்தது. ஸ்டாலனின் ஒப்பந்தப்படி, டெமாலிஷன் மேன் திரைப்படம் 125 மில்லியனுக்குமேல் வசூல் செய்தால் அதில் 15% பணத்தை அவருக்குத் தர வேண்டும். அதேபோல, 200 மில்லியன் வசூல் செய்தால் 17.5% பங்கு தர வேண்டும். 250 மில்லியனை வசூல் கடந்துவிட்டால் 20% பங்கு தர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. வசூல் என்றால் தியேட்டர் வசூல் மட்டுமல்ல. டிவிடி விற்பனை முதற்கொண்டு அத்தனை வியாபாரங்களுடன் சேர்ந்துதான். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக வார்னர் பிரதர்ஸிடமிருந்து எவ்வித அப்டேட்டும் வராததால் சமீபத்தில் இதுபற்றிய கேள்விகளை ஸ்டாலனின் ரஃப் மார்பில் நிறுவனம் முன்வைத்திருக்கிறது. அப்போது $66,926,628 டாலர்களை டெமாலிஷன் மேன் திரைப்படத்தின் வசூலாக வார்னர் பிரதர்ஸ் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் இந்த தகவலில் ஸ்டாலன் தரப்புக்கு ஏதோ சந்தேகம் வர சட்டத்தின் உதவியுடன் வார்னர் பிரதர்ஸை அணுகியிருக்கிறார்கள் அப்போது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் $2,820,000 டாலர்கள் மதிப்புள்ள ஒரு செக் அனுப்பியிருக்கிறார்கள். இதன்மூலம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டு தற்போது நீதிமன்றத்தின் வாசலில் நிற்கிறார் ஸ்டாலன்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017