மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ஆப்ரேஷன் கிளீன் மணி : 2ஆம் கட்ட ஆய்வு!

ஆப்ரேஷன் கிளீன் மணி : 2ஆம் கட்ட ஆய்வு!

பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு நாட்டில் ரூ.9,934 கோடி கருப்புப் பணம் சிக்கியுள்ளதாக மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கும்வகையில் பண மதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, கருப்புப் பணத்தை பதுக்கிவைத்தவர்கள் மீதும், வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக டெபாசிட் செய்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பண மதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு நவம்பர் 9ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,100 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட அதிகளவிலான தொகை குறித்து விளக்கம் கேட்டு சுமார் 5,100 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சோதனைகளில் ரூ.513 கோடி பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளும், ரூ.110 கோடி புதிய ரூபாய் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளால் கண்டறியப்பட்ட கணக்கில் வராத நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.5,400 கோடி என்று சமீபத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வரை மொத்தம் ரூ.9,934 கோடி கருப்புப் பணம் சிக்கியுள்ளதாக மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. வங்கிகளில் கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா எனக் கண்டறிய, 2 கட்ட ஆய்வுப்பணியை ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, சந்தேகத்துக்கிடமாக 17.92 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது. இவர்களில் 9.46 லட்சம் பேர் முறையாக விளக்கம் அளித்தனர். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டு வருகிறது. இவர்களில் 1,300 பேர் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்குப் பிறகு அதிகளவில் பணப் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் பேர் அதிகளவில் சொத்துகள் வாங்கியதில் அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017