மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

தொடரும் நெடுவாசல் போராட்டம் !

தொடரும் நெடுவாசல் போராட்டம் !

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார எழுபது கிராம மக்கள் மீண்டும் கடந்த புதன் கிழமை ( 12.4.2017) அன்று போராட்டத்தை தொடங்கினர். சாலை மறியல், அரசு அலுவலக முற்றுகை போராட்டம், கருப்புக் கொடி ஏற்றுதல், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளுதல் என பல்வேறு யுக்திகளோடு நெடுவாசல் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று கோரி 22 நாட்களாக நெடுவாசலில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ஆம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பனை எதிர்த்தும் நெடுவாசலில் புதன் கிழமை காலை இளைஞர்களும், பெண்களும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போலீசார் எவ்வளவோ தடுத்தும் மீறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடந்த புதன் கிழமை ( 12.4.2017) தொடங்கிய இந்தப் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் 70 கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் என ஒவ்வொன்றாக தொடர உள்ளனர் நெடுவாசல் கிராம மக்கள்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017