மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பதவி உயர்வில் இடஒதுக்கீடு : நாராயணசாமி

பதவி உயர்வில் இடஒதுக்கீடு : நாராயணசாமி

பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவர காங்கிரஸ் பாடுபடும் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 126வது பிறந்த நாள் விழா கடற்கரை சாலையில் ஏப்ரல் 14ஆம் தேதி காலை நடைபெற்றது.

விழாவில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொண்டு வருவதற்கான சட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டோம். ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. தற்போதுள்ள மத்திய அரசு இதை நிறைவேற்றுமா எனத் தெரியவில்லை. எனினும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்பெறும்வகையில் கண்டிப்பாக பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017