மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ரயில் செல்ஃபி : புகைப்படம் எடுத்தும் அதை ரசிக்க முடியாத இளைஞர்கள்!

ரயில் செல்ஃபி : புகைப்படம் எடுத்தும் அதை ரசிக்க முடியாத இளைஞர்கள்!

மேற்கு வங்கத்தில் ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய இளைஞர் நவீன தொழில்நுட்ப மோகத்தில் வீழ்ந்து வாழ்க்கையை தொலைத்துவிடும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில், ஹவுராவுக்கு அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், ரயிலின் வெளியே தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அதில் செல்ஃபி எடுத்த தரகந்த் மன்னா (22) என்பவர் மின் கம்பத்தில் மோதி ரயிலிலிருந்து வெளியே விழுந்தார். இந்தச் சம்பவம் லிலுவா மற்றும் பெலூர் ஸ்டேஷன்களுக்கு இடையே நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள் சுமித் குமிர், சந்தன் போலே மற்றும் காஜல் சாஹா மற்றும் காஜல் பிஸ்வாஸ் ஆகிய நான்குபேரும் பெலூர் ரயில் நிலையத்தில் இறங்கி விபத்து ஏற்பட்ட இடத்தை நோக்கி ஓடிவந்தனர். அப்போது அவர்கள் ஓடிவரும் பாதையில் கோகாத் என்ற உள்ளூர் ரயில் வேகமாக வந்துள்ளது. ரயில் வருவது தெரியாமல் மூவரும் ஓடியதால் அதில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சுமித் குமிர், சந்தன் போலே மற்றும் காஜல் சாஹா ஆகிய 3 பேரும் பலியாகினர். மேலும் காஜல் பிஸ்வாஸ் என்பவருக்கு பலத்த காயமடைந்துள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செல்பி எடுக்க முயன்ற தரகந்த்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்கு முன்பு இதேபோன்று, பண்டல் என்ற உள்ளூர் ரயிலிலிலிருந்து தவறி இளைஞர் ஒருவர் கீழே விழுந்தார். தற்போது அவர் ஹவுரா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து இளைஞர்கள் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் ஆகிய இடங்களில் செல்ஃபி எடுத்தால் 3 மாதச் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தபோதும் இளைஞர்கள் இதுபோன்று ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017