மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

ராமநாதபுரத்தில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொலை!

ராமநாதபுரத்தில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொலை!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே போலீஸாரை அரிவாளால் தாக்கிய பிரபல ரவுடி கோவிந்தனை போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம், தொண்டி உசிலனைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கோவிந்தன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இதனால், மாவட்ட காவல்துறை உத்தரவின்பேரில் கோவிந்தனைப் பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கோவிந்தன் தொண்டி அருகே சவேரியார்புரம் பகுதியில் ஏப்ரல் 13ஆம் தேதி நள்ளிரவு காரில் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் கோவிந்தனின் காரை பின்தொடர்ந்து சென்று சுற்றிவளைத்தனர். அப்போது கோவிந்தன் போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ., தங்கமுனியசாமி மற்றும் ஏட்டு சவுந்தரராஜன் இருவரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால், தனிப்படை போலீஸார் தங்களுடைய தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவிந்தன் தாக்கியதில் காயமடைந்த போலீஸார் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆய்வு செய்தார்.

கொலையான கோவிந்தனின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதனால், கோவிந்தனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017