மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அவரவர் எல்லைக்குள் இருக்க வேண்டும் : புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை!

அவரவர் எல்லைக்குள்  இருக்க வேண்டும் : புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை!

குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. ஆகையால், அவரவர் எல்லைக்குள்தான் அனைவரும் இயங்க வேண்டும் என புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் 14.04.2017 வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘நிர்வாகம் சட்டம் நீதித்துறைக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. எனவே, அனைவரும் அவரவர் எல்லையை மீறி இயங்கக் கூடாது. மீறினால் போலீஸ் ராஜ்ஜியம்போல் நம் நாடு மாறிவிடும். குடியரசுத் தலைவர், ஆளுநர், பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளன. ஆகையால் அவரவர் எல்லைக்குள்தான் அனைவரும் இயங்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017