மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

விவசாயக் கடன்: வாக்குறுதியை நிறைவேற்றிய தெலங்கானா!

விவசாயக் கடன்: வாக்குறுதியை நிறைவேற்றிய தெலங்கானா!

2014ஆம் ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி வெற்றிபெற்றால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. வாக்குறுதியை நிறைவேற்றும்விதமாக தெலங்கானா அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது.

அதன்படி, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ரூ.17,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அடுத்த நிதியாண்டில் இலவசமாக உரம், ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படும் என்றும் நேற்று (13.04.2017) அறிவித்தார். விவசாயக் கடனை ரத்து செய்வதற்காக தெலங்கானா அரசின் வருவாய்த் துறை தற்போது இரண்டாம் கட்டமாக ரூ.4000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மொத்தமாக ரூ.16,374 கோடி விவசாயக் கடனுக்கு விலக்கு அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது. ஐந்து கட்டங்களாக வங்கிகளுக்கு நேரடியாக அரசே கடன் தொகையை திரும்பிச் செலுத்தும் என்று அறிவித்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017