மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

டெல்லியில் விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்!

டெல்லியில் விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாத காலமாக போராடிவரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ஏப்ரல் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் சேலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லி சென்று ஜந்தர் மந்தர் பகுதியில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 32வது நாள் ஆகிறது.

தமிழக விவசாயிகள் இந்தப் போராட்டத்தில், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருளுக்கு லாபகரமான விலை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் கடந்த ஒரு மாத கால போராட்டத்தில், மண்டை ஓடுகளை மாலையாக அணிதல், பிச்சை எடுத்தல், தூக்குக்கயிறு மாட்டுதல், ஒப்பாரி வைத்தல், பாதி மீசை, தலை மழித்தல், நிர்வாணப் போராட்டம், குட்டிக்கரண போராட்டம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு போராட்ட வடிவத்தில் போராடி வருகின்றனர். இப்படி, பல வடிவங்களில் போராடியும் பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டத்தைக் கவனிக்காததால், பிரதமரின் கவனத்தை ஈர்க்க இன்று விவசாயிகள் 9 பேர் சேலை அணிந்து ஊர்வலம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டம் குறித்து அய்யாகண்ணு கூறியதாவது: ‘தமிழக விவசாயிகள் டெல்லி வந்து கடந்த மார்ச் 14ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினார்கள். இத்தனை நாள் போராட்டத்துக்குப் பிறகும் விவசாயிகளின் போராட்டத்தையும் அவர்களின் கோரிக்கைகளையும் பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. அதனால், நாங்கள் பெண்ணாக இருந்தால் அவர் மனம் இறங்கி கவனிப்பார் என்ற நோக்கத்தில் விவசாயிகள் சேலை அணிந்து போராட்டம் நடத்தியுள்ளோம். இன்றைய போராட்டத்தின் நோக்கம் பிரதமர் மோடி கவனிக்க வேண்டும் என்பதுதான்’ என்று கூறினார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 14 ஏப் 2017