மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

கவர்ச்சிக்கு கிடைத்த கவர்!

கவர்ச்சிக்கு கிடைத்த கவர்!

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ள ஆசியாவின் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திரங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை அலியா பட் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், இவர் நடித்த ‘பத்ரிநாத் கி துல்ஹனியா’ திரைப்படம் மெகா ஹிட் படமாக அமைந்துள்ளது. தற்போது அவர் ரன்பீர் கபீருடன் ‘டிராகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 2012ஆம் ஆண்டு Student Of The Year படத்தில் நடித்தது முதல் 2017இல் பத்ரிநாத் கி துல்ஹனியா வரை 9 படங்களில் 600 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார் அலியா பட். இவற்றில் பெரும்பான்மையானவை கமெர்ஷியல் படங்கள் கிடையாது. அலியா பட்டின் கேரக்டரையே சுற்றி அமைந்த திரைப்படங்கள். அதிலும் Student Of The Year, ஹைவே, கபூர் & சன்ஸ், உட்தா பஞ்சாப், டியர் சிந்தகி ஆகிய திரைப்படங்கள் அலியா பட் கேரக்டரைத்தான் அடிப்படையாகக் கொண்டவை. சந்தார், ஹைவே ஆகிய இரு திரைப்படங்களைத் தவிர மற்றவை அனைத்தும் ரூ.50 கோடிகளுக்குமேல் வசூல் செய்தவை. 2 ஸ்டேட்ஸ் திரைப்படம் நூறு கோடியைத் தொட்டது. மார்க்கெட் இருக்கும்வரை அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பதைவிட பெயர் கிடைக்கக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பது அலியா பட்டின் வழக்கமாக இருக்கிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017