மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

உபி போல் தமிழகமும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் : பொன். ராதாகிருஷ்ணன்

உபி போல் தமிழகமும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் : பொன். ராதாகிருஷ்ணன்

உத்தரபிரதேசத்தை போல் தமிழக அரசும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் இன்று (14.4.2017) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் மதுக்கடை திறக்க கூடாது என பெண்கள் போராட்டம் நடத்தினர். இது அவர்களின் உரிமை. ஆனால் போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் தாக்கி இருப்பது வருந்தத்தக்கதாகும்.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதீய ஜனதா அரசு எப்போதும் பெண்கள் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. டெல்லியில் கடந்த 30 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்காக நான் மத்திய அரசின் அந்தந்த துறை அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறேன். ஆனால் மாநில அரசு ஏன் எந்த நடவடிக்கை குறித்தும் பேசவில்லை? விவசாயிகளை மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சந்தித்து பேசவில்லை ஏன்? தமிழகத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர்களின் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன். தற்போது நடைபெறும் விவசாயிகள் போராட்டம் போல காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்தது உண்டா? தங்களது கோரிக்கைகளுக்காக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது. உழவன் நிலத்தில் உழும் போதுதான் கோவணம் கட்டுவான். உழுது முடிந்ததும் மானத்தை காக்க மேலாடை உடுத்திக் கொள்வான். ஆனால் இன்று அவர்கள் நிலைமை பரிதாபமானதாக இருக்கிறது. உத்தரபிரதேச அரசு அம்மாநில விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து இருக்கிறது. இதேபோல தமிழக அரசும் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017