மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சொத்துக் குவிப்பு வழக்கு : முதல்வருக்கு மீண்டும் சம்மன்!

சொத்துக் குவிப்பு வழக்கு : முதல்வருக்கு மீண்டும் சம்மன்!

அளவுக்கதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் இமாச்சலபிரதேச முதல்வருக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இமாச்சலபிரதேச காங்கிரஸ் தலைவரும், இமாச்சலபிரதேச முதல்வருமான வீரபத்ர சிங் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது. அதையடுத்து, வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி, மகன் உள்பட 9 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையெதிர்த்து, இமாச்சல உயர்நீதிமன்றத்தில் வீரபத்ர சிங் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த இமாச்சல உயர்நீதிமன்றம், வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவியை சிபிஐ கைது செய்ய இடைக்கால தடை விதித்து, கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரையில் அவர்களிடம் விசாரணை நடத்தவோ, குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யவோ கூடாது என்று இமாச்சல உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர், முதல்வர் வீரபத்ர சிங் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வீரபத்ர சிங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி மார்ச் 31ஆம் தேதி விசாரித்த பின்னர் வீரபத்ர சிங்கின் கோரிக்கையை தள்ளுபடி செய்தார். மேலும் இமாச்சல உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த உடனேயே வீரபத்ர சிங், மனைவி பிரதீபா சிங் உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில், வீரபத்ர சிங் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையும் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா, மகன் விக்ரமாதித்யா ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மெஹ்ராலி பகுதியில் அவருக்குச் சொந்தமான ரூ.27 கோடி மதிப்பிலான பண்ணை வீட்டை அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முடக்கியது குறிப்பிடத்தக்கது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017