மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு!

கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு!

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், மாணவர்கள் சேர்க்கையில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குக்கூட உரிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (IIM) பணிபுரியும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரிக்க இந்தியாவிலுள்ள 13 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கோரப்பட்டது.

இதில், 1985ஆம் ஆண்டுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு மற்றும் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை ஜாதி அடிப்படையில் சேகரிப்பதில்லை என்று தெரிவித்துவிட்டன. மேலும் திருச்சி மற்றும் ஷில்லாங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் இதுகுறித்து பதிலளிக்க மறுத்துவிட்டன.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017