மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

கூகுள் யாஹூ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

கூகுள் யாஹூ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் ஆன்லைன் விளம்பரங்களை 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும் என கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு நேற்று (ஏப்ரல், 13) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரசவத்துக்கு முன் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது இந்தியாவில் சட்டவிரோதமானது. ஆனால் பாலினத்தைக் கண்டறியும் விளம்பரங்கள் வலைதளங்களில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.

எனவே, கடந்த நவம்பர் மாதம் தேசிய ஆய்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினராக உள்ள சாபு மேத்யூ ஜார்ஜ் என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய உதவும் கருவிகள் மற்றும் கிளினிக்குகள் போன்றவற்றின் விளம்பரங்களை தொகுத்து வழங்கும் கூகுள், யாஹூ மற்றும் மைக்ரோசாஃப்ட் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது தொடர்பான 22 முக்கிய வார்த்தைகளை நீக்க நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017