மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அனைத்துக் கட்சி கூட்டம் விவசாயிகளுக்காகவே : ஸ்டாலின்

அனைத்துக் கட்சி கூட்டம் விவசாயிகளுக்காகவே : ஸ்டாலின்

வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமில்லை. அது விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான கூட்டம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'இது ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமல்ல. விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக நடைபெறும் கூட்டம். ஆட்சிமாற்றம் குறித்து என்னிடம் கருத்துக் கேட்பதை தவிர்த்து, தினகரனிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே வந்திருந்தன. ஆனால் தற்போது மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவிதுள்ளனவே என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், கடந்தமுறை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தின்போதும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால் தற்போது விவசாயிகளின் நிலை முன்னர் இருந்ததைவிட இன்னும் மோசமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தவிர மீதமுள்ள எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017