மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

டிஜிட்டல் திண்ணை: தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள்-பின்னணியில் ஓபிஎஸ்?

டிஜிட்டல் திண்ணை: தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள்-பின்னணியில் ஓபிஎஸ்?

மொபைலில் டேட்டா ஆன் செய்ததும், 'வாசகர்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள்!' என்ற மெசேஜ் முதலில் வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது. தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது. "இன்று காலை அமைச்சர்கள் ஒவ்வொருவராக டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு வந்தார்கள். அமைச்சர்களைத் தொடர்ந்து தம்பிதுரையும் வந்தார். முதலில் எல்லோரும் தினகரனுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர்தான் ஆரம்பித்திருக்கிறார்: 'உங்களோடு அதிகப்படியான தொடர்பில் இருந்ததால்தான் விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரெய்டு போனாங்க. அவரால் இன்று கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வந்திருக்கு. அவரை இப்போதைக்கு அமைச்சரவையிலிருந்து நீக்கி வைக்கணும். அப்பதான் நம்ம மேல இருக்கும் கெட்ட பெயரை மாற்ற முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் நீங்களும்கூட துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினால் அது கட்சிக்கு இன்னும் பலம் சேர்க்கும். வெளியில் இருந்து நீங்க என்ன சொல்றீங்களோ அதையெல்லாம் கேட்க நாங்க தயாரா இருக்கோம்' என்று சொல்ல, அதிர்ந்துவிட்டாராம். தினகரனோ, 'நான் வெளியில் வந்துட்டா நடக்குற பிரச்னை எல்லாம் சரியாகிடுமா? நான் இருக்கிறதாலதான் எல்லோரும் கட்டுக்கோப்பா இருக்காங்க. நான் பொறுப்பில் இல்லாமல் என்ன சொன்னாலும் அது எடுபடாது' என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு தம்பிதுரை பேசியிருக்கிறார். 'இருக்கிற பிரச்னையை எப்படி சரி செய்யுறதுன்னுதான் பார்க்கணும். இப்போ யாரையும் பதவியை விட்டு தூக்குறது தீர்வாக இருக்காது. எப்போ நமக்குள்ள அடிச்சுக்குவோம்... ஆட்சி எப்போ கலையும்னு சிலர் பார்த்துட்டு இருக்காங்க. அதுக்கு நாமே வழிவகுத்து கொடுத்துடக் கூடாது. நமக்குள்ள இந்த நேரத்துல ஒற்றுமைதான் முக்கியம்' என்று தம்பிதுரை சொல்ல... பல அமைச்சர்கள் அதை ஆமோதித்திருக்கிறார்கள். கடைசியாக தினகரன் பேசும்போது, 'எனக்கு எப்பவுமே பதவி ஆசை கிடையாது. சின்னம்மா சொன்னதாலதான் நான் இந்த இடத்துக்கு வந்தேன். அம்மா கட்டிக்காத்த கட்சியை பார்த்துக்கவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கு. உங்களுக்கு நான் எப்பவும் உண்மையாக இருப்பேன். எனக்கு நீங்க எல்லோரும் ஒண்ணுதான். யாருக்கும் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்னு நினைச்சுடாதீங்க. நீங்க யாரு என்ன நினைச்சாலும் அதை வெளிப்படையாகப் பேசுங்க. அப்போதுதான் நமக்குள் தெளிவு இருக்கும்' என்று சொல்லியிருக்கிறார். இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் மிஸ்ஸிங்" என்பதுதான் அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.

தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது. அந்த ஸ்டேட்டஸ் இதுதான்...

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017