மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மரணம்!

ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர்  மரணம்!

ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் கூடைப்பந்து வீரர் கோப் பிரையன்ட் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் மரணமடைந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கலபசாஸ் பகுதியில் நேற்று( ஜனவரி 26) கோப் பிரையன்ட் தனது மகள் ஜியோனாவுடன் ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருக்கும் போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் கோப் மற்றும் அவருடைய மகள் உள்பட ஏழு பேர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகினர்.

விபத்து நடந்த நேற்று ஹெலிகாப்டர் பறப்பதற்கு சாதகமான வானிலை இல்லாத காரணத்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் விமான பிரிவுவில் எந்த ஹெலிகாப்டரும் இயங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவம் ஃபெடரல் புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

20 வருடங்களைக் கடந்து கூடைப் பந்து விளையாட்டில் சாதித்து வந்த கோப், 2016ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். 41 வயதான கோப் பிரையன்ட் லாஸ் ஏஞ்செலஸின் போக்குவரத்து நெரிசலை தவிற்பதற்காக, வழக்கமாக ஹெலிகாப்டரில் மட்டுமே பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

கோப் மறைவிற்கு அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்ப், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்பட அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

திங்கள் 27 ஜன 2020