மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 ஜன 2020

அந்தரங்கத்திலும் பிரைவசி இல்லை!

அந்தரங்கத்திலும் பிரைவசி இல்லை!

நெட்டிசன்ஸ் மத்தியில் பிரபலமாக இருப்பது ‘செக்ஸ்டிங்’ இணையதளம். அதில் இருக்கும் மாடல்கள் மற்றும் அதைப் பயன்படுத்துவோர்களின் ஓட்டுநர் உரிமம், வீட்டு முகவரி போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளதாக, ‘TechCrunch’ என்ற இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த இந்த இணையதளத்தில் ஆபாசமான உரையாடல்கள், புகைப்படங்கள், நேரடி வீடியோ ஒளிபரப்பு போன்றவற்றை செய்வோருக்கு அவர்கள் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.

தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து இணையதளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இதுபோன்ற பாலியல் ரீதியான உறவுமுறைகளில் ஈடுபடும் நபர்களின் பெயர், முகவரி, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்வேர்டு) மற்றும் அந்த நபர் பகிர்ந்துகொண்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆபாசப் படங்கள் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் இதைப் பற்றி விசாரித்தபோது, ‘இந்தத் தகவல்கள் எந்த இணையதள முகவரியிலிருந்து வெளிவந்தது என்பது கண்டறியப்படவில்லை. இணையதளத்தின் தகவல்கள் பாதுகாப்பு மற்றும் ஊடுருவலை சோதனை செய்யும். பிரிட்டனைச் சேர்ந்த ‘ஃபடஸ் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி’ என்ற நிறுவனம், இந்தத் தகவல்கள் அரிசோனா மாகாணத்தில் இருக்கிற ஒரு இணைதளத்திலிருந்து வெளிவந்ததைக் கண்டறிந்துள்ளது.

இதைப் பற்றி அந்த இணையதளத்தின் ஆபரேட்டரான அலெக்சாண்டர் கிஸ்ஸிட்டி உடனடியாக எச்சரிக்கப்பட்டார். இதற்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்த அலெக்சாண்டர், “இதைப் பற்றி மேலும் விசாரிப்பதற்கு எங்களுடைய பாதுகாப்பு மேம்பாட்டாளர்கள் குழுக்களுக்கு அறிவித்துள்ளோம். இந்த வகையான குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்து விசாரிப்போம்” என்றார். ஆனால், தகவல்கள் எவ்வாறு வெளியேறியது என்பதைப் பற்றி எந்த ஒரு விவரத்தையும் அவர் அளிக்கவில்லை.

அந்தரங்க தகவல்கள் கசிந்தது எப்படி?

நாம் எப்படி நமது கணினிகளில் தகவல்களைச் சேமித்து வைத்துக்கொள்கிறோமோ, அதேபோல இணையதளத்திலும் ‘ஸ்டோரேஜ் பக்கெட்ஸ்’ எனப்படும் ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ வசதி மூலம் தகவல்களைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். தகவல் சேகரித்து வைக்கும் ஸ்டோரேஜ் பக்கெட்டுக்கு, பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் இணையதள முகவரியை அறிந்தவர்கள், அந்தத் தகவல்களை எளிதாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது இணையதளத்தில் பகிர்ந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் இதுவரை இந்த அரிசோனாவைச் சேர்ந்த இணையதளத்திலிருந்து, சுமார் 11,000 நபர்களின் தகவல்கள் கசிந்துள்ளன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களே அதிகம்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

திங்கள் 27 ஜன 2020