}ஒழுங்கீன செயல்பாடு: 5 ஆண்டுகள் தேர்வெழுதத் தடை!

public

2019-20 கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10 ,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக வினாத்தாள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளைத் தேர்வுத் துறை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மாணவர்கள் பொதுத் தேர்வின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

மாணவர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தேர்வுத்துறை, தேர்வின்போது காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுதல், ஆள் மாறாட்டம் செய்தல் என ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். என்று எச்சரித்துள்ளது.

மேலும், அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களையும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பாதுகாப்புடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதோடு மட்டுமின்றி தனி காவலரையும் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும்.

பொதுத்தேர்வு பணிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் தனியார்ப் பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. அதுபோன்று தேர்வு நடைபெறும் பள்ளிகளில் படிக்கும் இதர வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாள்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

-கவிபிரியா�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *