மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

இந்திய சிறுபான்மையினரின் எதிர்காலம்: ஐ.நா பொதுச் செயலாளர் கவலை!

இந்திய சிறுபான்மையினரின் எதிர்காலம்: ஐ.நா பொதுச் செயலாளர் கவலை!

இந்தியாவில் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியா குடரெஸ் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், எதிர்காலத்தில் இந்திய முஸ்லிம்களை நாடற்றவர்களாக ஆக்கக் கூடுமென்றும் அவர் கூறியுள்ளார்.

நான்கு நாட்கள் பயணமாக பாகிஸ்தான் சென்ற ஐ.நா பொதுச் செயலாளர் பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி டான் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களை உருவாக்கும்போது மனிதாபிமானத்துடன் செயல்படுமாறு நாடுகளை அவர் வலியுறுத்தினார்.

“பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க முற்படும் இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்துத் தனிப்பட்ட முறையில் அக்கறையும் கவலையும் கொண்டுள்ளேன். புதிய குடியுரிமைச் சட்டங்களை இயற்றும் அதே வேளையில், அவர்கள் நாடற்ற குடிமக்களை உருவாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குடரெஸ் கூறியுள்ளார்.

உலகின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று குடரெஸ் கூறினார்.

-வேந்தன்

வியாழன், 20 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon