மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

தமிழக கோடீஸ்வரர்களின் லிஸ்ட்: முதலிடத்தில் யார்?

தமிழக கோடீஸ்வரர்களின் லிஸ்ட்: முதலிடத்தில் யார்?

IIFL Wealth Hurun India கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. தற்போது 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 9 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சன் நெட்வொர்க்கின் உரிமையாளர் கலாநிதிமாறன் 19,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய அளவில் 43ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். அதுபோன்று தமிழகத்தில், Zoho Corporation–ன் வெம்பு ராதா 9,900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் வெம்பு சேகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ரூ.7,100 கோடி மதிப்புடன், போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனார் மற்றும் குடும்பத்தினர் நான்காவது இடத்தையும், ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் நிறுவனத்தின் ஆர்.ஜி.சந்திரமோகன் ரூ.7,000 கோடி மதிப்பு சொத்துடன் 5ஆவது இடத்தையும், கவின் கேரின் சி.கே ரங்கநாதன் 5,300 கோடி ரூபாய் மதிப்புடன் 6 ஆவது இடத்தையும்,

அமல்கமேஷன் குழுமத்தின் ( Amalgamations Group) தலைவர், கிருஷ்ணமூர்த்தி, சீதா வெங்கட்ரமணி ஆகியோர் ரூ,4500 கோடி மதிப்புடன் 7 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். Trivitron healthcare-ன் ஜி.எஸ்.கே வேலு, டி.டி.கே பிரஸ்டீஜ் நிறுவனத்தின் டி.டி ரகுநாதன் ஆகியோர் தலா ரூ.3100 கோடி மதிப்புடன் 9ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

IIFL Wealth Hurun India தரவுகள் படி, மொத்தமாக ரூ. 1,38,400கோடி மதிப்புடன் தமிழகத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2018-ஐ காட்டிலும், 2019ல் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

தற்போது 8ஆவது ஆண்டாக IIFL Wealth Hurun India இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து இந்திய அளவில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 3,80,700 கோடி ரூபாயாக உள்ளது.

-கவிபிரியா

வியாழன், 20 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon