_கிச்சன் கீர்த்தனா: பாதாம் பழக்கூழ்!

public

Cஇத்தாலி, இராக் மற்றும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவிகிதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரக் கணக்கு. முதியவர்கள் தவிர, நீரிழிவு போன்ற வேறு பாதிப்புள்ளவர்களையும் நோய் எளிதில் பாதித்துள்ளது. பொதுவாக வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்கள் எளிதில் தாக்குகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனைத்து சத்துகளும் நிரம்பிய காலை உணவாக இந்தப் பாதாம் பழக்கூழ் செய்து சாப்பிடலாம். ரத்த அணுக்களைப் பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை பாதாம் பருப்புக்கு உண்டு.

**என்ன தேவை?**

பாதாம் பால் – 150 மில்லி

சியா விதை – அரை டீஸ்பூன்

கிர்ணிப் பழ விதை – 5 கிராம்

பாதாம் பருப்பு – 5 கிராம்

உலர்திராட்சை – 5 கிராம்

அக்ரூட் – 5 கிராம்

ஓட்ஸ் – 5 கிராம்

ஸ்ட்ராபெரி / வாழைப்பழம் / ஆப்பிள்/ கிர்ணிப் பழம் இவற்றில் ஏதாவது ஒன்று – ஒரு நாளைக்கு ஒன்று

**எப்படிச் செய்வது?**

பாதாம் மற்றும் அக்ரூட்டைப் பொடியாக நறுக்கவும். முந்தைய நாள் இரவே, காய்ச்சிய பால் அல்லது பாதாம் பாலில் நறுக்கிய பாதாம், அக்ரூட் மற்றும் தேவையானவற்றில் உள்ள அத்தனை பொருள்களையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். மறுநாள் காலையில் வெளியே எடுத்து, அறை வெப்பநிலைக்கு வந்ததும் நறுக்கிய பழங்களைத் தூவி சாப்பிடவும்.

[நேற்றைய ரெசிப்பி: உளுந்துக்கஞ்சி](https://www.minnambalam.com/k/2020/03/24/3)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *