மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

சமூக விலகலை செயல்படுத்திக் காட்டிய அமைச்சரவை கூட்டம்!

சமூக விலகலை செயல்படுத்திக் காட்டிய  அமைச்சரவை கூட்டம்!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா இன்று (மார்ச் 25) முதல் 21 நாட்களுக்கு முடக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வழக்கத்துக்கு மாறான அமைதியோடு நகர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுத்து அறிவித்த பிறகும்... நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்ட வரிசைகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சமூகத் தொற்று என்ற நிலையை கொரோனா வைரஸ் அடைந்திருக்கும் நிலையில் சோசியல் டிஸ்டன்ஸிங் என்ற விலகி இருத்தலை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதை செயலில் காட்டும் வகையில் இன்று டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,.. பிரதமரும் அமைச்சர்களும் வழக்கத்திற்கு மாறாக சில அடிகள் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.

21 நாள் முடக்கு அறிவிப்பை நடைமுறைப்படுத்துவது, அதில் உள்ள சவால்களை சமாளிப்பது, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தெந்த வகைகளில் ஒத்துழைப்பு வழங்குவது என்பது பற்றி இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

வேந்தன்

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon