மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

வெளியே வராதீர்கள்: கையெடுத்து கும்பிட்ட போலீஸ்!

வெளியே வராதீர்கள்: கையெடுத்து கும்பிட்ட போலீஸ்!

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரசீத், ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து வெளியே வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சமின்றி மக்கள் சாலைகளில் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் பாஸ்போர்ட் முடக்கப்படும், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உத்தரவை மீறி செயல்பட்டதாக சென்னையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை அண்ணாசாலையில் உதவி காவல் ஆய்வாளர் ரசீத், சாலையில் வருபவர்களை கையெடுத்து கும்பிட்டு தயவுசெய்து வெளியே வராதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். யாரும் வெளியே வராதீர்கள். நாட்டின் நன்மைக்காக உங்களை வீட்டில்தான் இருக்க சொல்கிறோம். வேறு எதுவும் உங்களிடம் கேட்கவில்லை. தற்செயலாக வெளியில் வந்திருந்தால் கூட திரும்பி போய்விடுங்கள் என்று வாகன ஓட்டிகளிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுள்ளார் .

இவரது செயல் வரவேற்கத்தக்கது என்றாலும் இனியாவது பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கவிபிரியா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon