மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

டீ கடைகள், உணவு விநியோக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு!

டீ கடைகள், உணவு விநியோக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை மாநகராட்சி சார்பில் அடுத்தடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாலை 6 மணி முதல் சென்னையில் அனைத்து டீ கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கீழ் குறிப்பிட்ட முக்கிய உத்தரவுகளைச் சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.

அதன்படி மாலை 6 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு டீ கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளில் அதிகமானோர் ஒன்றிணைந்து டீ குடிக்கும் பழக்கம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற தனியார் நிறுவனங்கள் வீடுகளில் உணவுகளை டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுகிறது. மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்யவும் அனுமதி உண்டு. ஆனால் தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் டோர் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுபவர்கள் பாதுகாப்பு முறையைப் பின்பற்றவில்லை என்றால் அந்த நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும். பாதுகாப்பான நெறி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை வீட்டிற்கே வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலும், டீக்கடைகள், ஜூஸ் கடைகள் ஆகியவற்றை மூடுவதற்குத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கவிபிரியா

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon