மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

ரூ.3.94 கோடி தேயிலை தேக்கம்!

ரூ.3.94 கோடி தேயிலை தேக்கம்!

உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் உற்பத்தியாகும் தேயிலை, குன்னூரில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 23ஆம் தேதி தேயிலை வர்த்தகச் சங்கத்தில் நடந்த, 12ஆவது ஏலத்தில் 3.94 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை தூள் 36 சதவிகிதம் ஏலம் எடுக்கப்படாமல் தேக்கமடைந்தது. கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் தேயிலை தூள் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.

இதுகுறித்து, சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் சுந்தர் கூறுகையில், “ஜனவரியில் இருந்து நடந்த ஏலங்களில், 30 சதவிகிதத்தில் இருந்து, 41 சதவிகிதம் வரை தேயிலை விற்கவில்லை. வடமாநில உற்பத்தி அதிகரித்ததால் உள்நாட்டு வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் தென்னகத்தை நாடுவதில்லை.

ஏற்கனவே, பாகிஸ்தான், இரான் பிரச்சினைகளால் ஏற்றுமதி பாதித்துள்ளது. தற்போது கொரோனா காரணமாக ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது; தேவை குறைந்ததால் வர்த்தகர்களிடையே வாங்கும் ஆர்வம் குறைந்தது” என்கிறார்.

-ராஜ்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon